ஜனதா கட்சிகள் இணைப்பு ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு

By பிடிஐ

முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி, லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், நிதிஷ் குமார், சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஓம் பிரகாஷ் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம், மறைந்த முன் னாள் பிரதமர் சந்திர சேகர் தொடங் கிய சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகிய 6 ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந் நிலையில் நடப்பாண்டு இறுதியில் பிஹார் சட்டப்பேரவைக்கும் 2017 தொடக்கத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜகவை எதிர்கொள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பாக ஜனதா கட்சிகளை ஒன்றி ணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவிடம் பிடிஐ செய்தி நிறுவனம் விளக்கம் கோரியபோது, ஜனதா கட்சிகள் ஒன்றிணைப்பு குறித்த அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எனவே அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கட்சிக்கு தலைமை ஏற்கும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்