86 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அதிபர் உத்தரவு

By செய்திப்பிரிவு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்ய அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 86 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.

பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று நம்பப்பட்டுவரும் நிலையில், மீனவர்கள் விடுதலை குறித்து சிறிசேனா பேசினார்.

''இலங்கை சிறையில் உள்ள 86 மீனவர்களும் விடுவிக்கப்பட உள்ளனர். இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு வர உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நல்லெண்ண அடிப்படையில் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்'' என சிறிசேனா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்