இஎஸ்ஐசி கல்லூரிகளை தொடர்ந்து நடத்த அரசு முடிவு

By பிடிஐ

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி) சார்பில் இப்போது செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம், இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும் போது, “இஎஸ்ஐசி சார்பில் செயல்பட்டு வரும் 4 மருத்துவக் கல்லூரிகளையும் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 மருத்துவக் கல்லூரிகளையும் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இனி வரும் காலங்களில் மருத்துவக் கல்வித் துறையில் இஎஸ்ஐசி ஈடுபாடாது. எனவே, இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படமாட்டாது. இந்த முடிவு குறித்து தெரிவிப்பதற்காக இஎஸ்ஐசி வாரிய கூட்டம் விரைவில் கூட்டப்படும்” என்றார்.

இப்போது ராஜாஜி நகர் (பெங்களூரு), கே.கே.நகர் (சென்னை), ஜோகா (கொல்கத்தா) மற்றும் ரோஹினி (டெல்லி) ஆகிய இடங்களில் இஎஸ்ஐசி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்