தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவித்தேன்: சுஷ்மா ஸ்வராஜ்

By பிடிஐ

எல்லை தாண்டினால் தமிழக மீனவர்கள் சுடப்படுவார்கள் என்ற இலங்கைப் பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு அரசிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த வாரம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து அவர் மாநிலங்களவையில் கூறியதாவது:

தந்தி டிவிக்கு பேட்டியளித்தபோது, எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கடற்படை வீர்ரகள் சுடுவதில் தவறில்லை என்று கூறியது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிடம் இந்தியாவின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மீனவர்கள் பிரச்சினையை இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்துடன் ஒப்பிடக் கூடாது என்றும், மீனவர்கள் பிரச்சினை வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன்.

ஆழ்கடல் மீன்பிடிப்பை நோக்கி நகரும் வரை மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினையை தொழில்நுட்ப ரீதியில் அணுகாமல் மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும் என்று அவரிடம் எடுத்துரைத்தேன்.

மேலும் மீனவர்கள் மீது இருதரப்பு கடற்படையும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவது சரியல்ல என்றும் தெரிவித்தேன். நான் தெரிவித்த இரண்டு கருத்துகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் வரை இடைக்கால ஏற்பாடு செய்யப்படும். இதுகுறித்து இருதரப்பு மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும். பிரதமரின் இலங்கை பயணத்துக்குப் பிறகு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்