பஞ்சாபின் ஹுசைன்வாலா நினைவிடத்தில் பகத் சிங், சுகதேவ், ராஜகுருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

By செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பஞ்சாப் மாநிலத்துக்கு முதன்முறையாக நேற்று சென்ற பிரதமர் மோடி, ஹுசைன்வாலாவில் உள்ள பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக மோடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவுநாளில் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்றார்.

கடந்த 1928-ம் ஆண்டு பிரிட்டிஷார் ஆட்சியின்போது காவல் துறை கண்காணிப்பாளரை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி மூவரும் லாகூரில் உள்ள மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

பிரதமர் மோடி தனது பயணத்தின்போது அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோயிலுக்கு சென்றார். பின்னர் ஜாலியன் வாலாபாக் சென்ற அவர், 20-ம் நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டுக்கு உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்