மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கன்னியாஸ்திரி

By செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் கொள்ளை கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்ததையடுத்து இன்று அதிகாலை 2.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

ரானாகட் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஏ.என்.மோண்டோல் கூறும்போது, "ஜீஸஸ் மேரி கான்வென்ட்டின் மதர் சுபீரியர் இன்று காலை 2.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். முன்னதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மதர் சுபீரியர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 2.20 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும். அவர் தனது உடமைகளைப் பெறுவதற்கு சிறிது கால தாமதமானது. இதனையடுத்து அவர் 2.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்" என தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்