ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: முன்னாள் விமானப் படை அதிகாரிகள் இருவருக்கு சம்மன்

By ஏஎன்ஐ

முக்கிய அரசியல் தலைவர் களுக்கான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப் படை முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் எனும் இத்தாலிய ஹெலிகாப்டர் நிறுவனம் ஒன்றுடன் இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கடந்த 2013ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் மூல நிறுவனமான பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஒருவர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தை அடைய அந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்துள்ளது என்று காரணம் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், விமானப் படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பெறு வதற்காக, இவர்கள் இருவருக் கும் கிறிஸ்டியன் மிஷெல் எனும் இடைத்தரகர் லஞ்சம் வழங்கியிருப்பது தெரிய வந் துள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை மேற் கண்ட அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்