பாரத ரத்னா விருது பெறும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் நிறுவனர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்(90) நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருதை இன்று பெற்றுக்கொள்கிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது வீட்டுக்கே சென்று விருதை வழங்க உள்ளார்.
இந்நிலையில், தனது ட்விட்டரில் மம்தா பானர்ஜி, "வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகவும் பொருத்தமானதாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
வாஜ்பாய் உடல்நலம் குன்றி இருப்பதால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மரபுகளை மீறி அவரது வீட்டுக்கே சென்று இந்த விருதை வழங்கி கவுரவிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago