நிலச்சட்டத்தை எதிர்த்து முதல்வர் நிதிஷ் நாளை உண்ணாவிரதம்

By ஐஏஎன்எஸ்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் கூறும்போது, "நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ்குமார் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அவருடன் கட்சியின் மாநிலத் தலைவர் பஷிஷ்ட நாராயண் சிங்கும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

கட்சி தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமை தாங்குகின்றனர்" என்றார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஆரம்பம் முதலே நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. அவர்கள் நலனை பாதிக்கும் கருப்புச் சட்டம் என நிதிஷ் கூறி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்