வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் பிரணாப்

By பிடிஐ

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு (90) நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. தேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பொதுவாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெறும் விழாவில்தான் பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகள் வழங்கப் படுவது வழக்கம். எனினும், வாஜ்பாயின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மரபு மாற்றப்பட்டு அவரது வீட்டுக்கே சென்று விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன், வாஜ்பாய் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

பிரதமர் நெகிழ்ச்சி

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித் துள்ளார்.

மரபுகளை மீறி வாஜ்பாய் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கியது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மோடி, “வீட்டுக்கு சென்று விருதை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புக் கொண்டது அவரது கவுரவத்தையும், கருணை யையும் வெளிக்காட்டுகிறது. இதற்காக குடியரசுத் தலைவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தேசத்துக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் வாஜ்பாய். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டதில் இருந்து ஒவ்வொரு விநாடியும் நாட்டுக்காக வாழ்ந்தார். தேச முன்னேற்றம் குறித்து சிந்தித்தார். இந்தியாவில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண் டர்களுக்கு வாஜ்பாய் தூண்டு தலாக இருக்கிறார். அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் அவர் தொடர்ந்து தூண்டு கோலாக இருப்பார். இதற்காக நான் ஆண்டவனைப் பிரார்த்திக் கிறேன்” என்று மோடி கூறினார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2009-ம் ஆண்டில் பொது வாழ்க்கையிலிருந்து வாஜ்பாய் விலகினார்.

இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உட்பட 43 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்