ஜம்மு காஷ்மீர் எல்லையில் தாக்குதலை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

எல்லையில் தொடரும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோடி ட்விட்டரில் “பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளேன்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு முன்னதாக, இரு நாட்டு எல்லை யில் தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல் சம்பவங் களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தி அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானதும் பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், இந்த பேச்சுவார்த் தைக்கு முன்னதாக பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹுரியத் தலைவர்களுக்கு விருந்து

பாகிஸ்தான் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் டெல்லியில் நேற்று விருந்து அளித்தார்.

இதில் ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் சிலர் கலந்து கொண் டனர். இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்டில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் களை அப்துல் பாசித் அழைத்துப் பேசியதால் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியை பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள அந்த நாட்டு தூதரகத்தில் நேற்றிரவு சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹுரியத் தலைவர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியபோது, இவ் விவகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்