நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 1,370 பேர் பலி

By செய்திப்பிரிவு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,370ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,190ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 376 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 322 பேரும், ராஜஸ்தானில் 321 பேரும், மகாராஷ்டிராவில் 211 பேரும் இந்நோய்க்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நோயின் தாக்கம் தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 19 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 7 பேரும், சென்னையில் 5 பேரும், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 376 பேர் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்நோய்க்கு 12 பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்