நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக தான் நடத்தும் போராட்டத்துக்கு சோனியா காந்தி ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.
ஜலந்தரில் தியாகிகள் குடும்பத்துக்கு உதவி அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹசாரே, "சோனியா காந்தி நிலச்சட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியின் நலனே.
தற்போதைய பாஜக ஆட்சி எப்படி விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்துவதில்லையோ, அப்படியேதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும் செயல்பட்டது. தற்போது இவர்கள் காண்பிக்கும் எதிர்ப்பு உண்மையாக இருந்தால், 2013ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்த போதே நாடு முழுதும் விவசாயிகளிடத்தில் ஆய்வு நடத்தியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை நான் மக்கள் நலன்களுக்காக போராட்டம் தொடங்கும் போதெல்லாம் அரசியல் கட்சிகள் அதில் அரசியல் லாபம் அடையும் நோக்கத்துடன் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் சாமானிய மக்கள் அரசியல் கட்சிகளின் உள்நோக்கங்களை கண்டறிவது அவசியம்.
நிலங்களை வகைப்பிரித்து, சர்வே செய்த பிறகே சட்டம் கொண்டு வரப்படவேண்டும். வறண்ட, விவசாயம் செய்ய முடியாத நிலங்களைத்தான் கையகப்படுத்த முடியும்” என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சிப் பூசல் குறித்து கேட்ட போது, அண்ணா ஹசாரே, “பிரச்சினை நாற்காலிதான். அதிகாரம் கைக்கு வந்த பிறகு மனம் மாறிவிடுகிறது. அதிகாரம் கைக்கு வந்தவுடன் நாற்காலி மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago