ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் குறித்து அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
"ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அர்விந்த் கேஜ்ரிவால் இன்று முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கேஜ்ரிவால் தேசிய செயற்குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், "டெல்லி முதல்வராக இருப்பதால் கட்சிப் பணிகளை கவனிக்க முடியாது. எனவே, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என கூறியிருந்தார்.
ஆனால் அவரது ராஜினாமா முடிவுக்கு கட்சியின் உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில் கேஜ்ரிவால் ராஜினாமா குறித்து ஆலோசிக்கப்படும்" என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.
முன்னதாக இன்று காலை, அர்விந்த் கேஜ்ரிவால் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago