உத்தரப்பிரதேச மாநிலம் காசி யில் உள்ள கங்கைக் கரைகளில் பிஎஸ்என்எல் சார்பில், இலவச வைஃபை சேவை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள காசி, வாரணாசி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தெய்வீக நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் வாரணாசியில் கங்கை ஆற்றின் கரைகளில் மிகவும் பழமையான படித்துறைகள் உள்ளன. இங்குவரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், தசாஸ்சுவமேத கரை மற்றும் சிஸ்லா கரைகளில் முதல் கட்டமாக இச்சேவை தொடங்கப் பட உள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் உ.பி மாநில பிஎஸ்என்எல் மார்கெட்டிங் பிரிவு தலைமை அதிகாரி ஏ.கே.கன்னௌஜியா கூறும்போது, “‘உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை முதன்முறையாக வாரணாசியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கங்கைக் கரையின் ஆறு படித்துறைகளான ராஜேந்திர பிரசாத், மன்மந்திர், திருப்தி பைரவி, மீர், லலிதா மற்றும் மணிகர்னிகா ஆகியவற்றிலும் வரும் மார்ச் இறுதிக்குள் இலவச வைஃபை சேவை அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாரணாசி உலகின் சிறப்பான தெய்வீக சுற்றுலா தலமாக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்தது நினைவுகூரத்தக்கது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago