டெல்லியில் வரும் பிப்ரவரி 7-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தரலாம் என அம் மாநிலத்தின் தென்மேற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் தூய்மை இந்தியா கோஷத்தை நிறைவேற்றும் வகையில் டெல்லியின் தென்மேற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் அங்குர் கர்க் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதன்படி, இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் புகார் செய்யலாம். இது தொடர்பான புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பேஸ்புக்கில் பதிவு செய்யலாம். புகார் தருபவர்கள் தங்கள் பெயர், விலாசத்தை தெரிவிக்க வேண்டும். புகார் தருபவர்கள் தங்களைப் பற்றிய விவரம் தர விரும்பவில்லை என்றாலும் புகார்கள் ஏற்கப்படும்.
தனியார் மற்றும் அரசு இடங்களில் சுவரொட்டிகள், பேனர்கள் அனுமதியின்றி ஒட்டப்படுவது குறித்தும், தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெறும் கலவரம் தொடர்பாகவும் ஆதாரங்களுடன் புகார்களை அனுப்பலாம்.
அதேபோல், வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து பிரச்சாரம் செய்வது, மற்றவர்கள் சமூகத்தின் மீது இழிவாக பேசுவது, சட்டத்துக்குப் புறம்பாக ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது உட்பட அனைத்து தேர்தல் விதி மீறல்கள் குறித்தும் சமூக இணையதளமான பேஸ்புக் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் ஆகியவை மூலம் புகார் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தென்மேற்கு டெல்லியின் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, “இதற்கென தனியாக ஒரு கைப்பேசி ஒதுக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் புகார்களை பெற்று பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வரும் புகார்களை கவனிப்பதற்காக தனியாக கணினி ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கலவரம் தொடர்பான புகார்களாக இருந்தால் அதன்மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
இதுவரையில் டெல்லியின் தென்மேற்கு மாவட்டத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சுமார் 34,000 சுவரொட்டிகள், 2,900 பேனர்கள், 4,100 விளம்பர பலகைகள் உள்ளிட்டவை அரசுக்கு சொந்தமான கட்டிடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago