பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் ஆர்.கே.பச்சவ்ரி, காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental panel on climate change - IPCC - ஐபிசிசி) தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பச்சவுரியின் செய்தி தொடர்பாளர் இது குறித்த தகவலை வெளியிட்டார். அதாவது, ஐபிசிசி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் அவர்.
இந்தத் தகவல் குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் ஐபிசிசி-யிட தொடர்பு கொண்டு கேட்ட போது, "விவகாரம் நீதி விசாரணையில் இருக்கும் போது கருத்து தெரிவிக்க இயலாது” என்று கூறியுள்ளது.
பச்சவுரி தனது ராஜினாமா கடிதத்தில், “ஐபிசிசி-க்கு வலுவான தலைமையும், முழு நேர அர்ப்பணிப்பும், தலைமையில் முழு கவனமும் உடனடியான எதிர்காலத்தில் தேவையாக உள்ளது.
இப்போதுள்ள சூழ்நிலையில் இவற்றை என்னால் நிறைவேற்ற முடியாத நிலைமையில் இருக்கிறேன். எனவே நான் ஐபிசிசி தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து துணைத்தலைவர் பதவியிலிருந்த இஸ்மாயில் எல் கிஸவ்லி என்பவரை தற்காலிகமாக தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளதாக ஐபிசிசி தெரிவித்துள்ளது.
தி எனர்ஜி அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் தலைமை இயக்குநரான பச்சவுரி மீது 29 வயது பெண் ஆய்வாளர் டெல்லி போலீஸில் பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தச் சூழலில், ஐபிசிசி தலைவர் பதவியில் இருந்து பச்சவுரி ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
இவர் தலைமை வகித்து வந்த காலகட்டமான 2007 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசை ஐபிசிசி அமைப்பு, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் பகிர்ந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago