மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், கழிப்பறை பயன் பாட்டை வலியுறுத்தும் வகையில், வரும் சனிக்கிழமை 122 கி.மீ.தூரத்துக்கு மனித சங்கிலி அமைத்து உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே நாடியா மாவட்ட நிர்வாகம் ‘அனை வருக்கும் கழிப்பறை’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.72 லட்சம் கழிப் பறைகள் கட்டப்பட்டுள்ன. மீதம் உள்ள 42 ஆயிரம் கழிப்பறைகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை பிரம்மாண்டமான மனித சங்கிலி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாவட்டத்தின் வடகோடியிலுள்ள ஜகுலி முதல் தென்கோடியில் உள்ள பள்ளாசி வரையிலான 122 கி.மீ. தூரத்துக்கு இந்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகின் மிகப்பெரிய மனிதச் சங்கிலி என்று அங்கீகரிக்குமாறு, லிம்கா மற்றும் கின்னஸ் உலக சாதனை அமைப்புகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago