வரும் 25-ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொண்டனர்.
இந்திய வங்கிகள் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
இதில் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இதன்படி 15%ஊதிய உயர்வு வழங்கவும், மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யவும், அடுத்த மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்திருந்தன.
இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட, 16கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கத்தினர் திரும்பப் பெறுமாறு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை ஒட்டி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago