தெளிவே இல்லாத பட்ஜெட்: முன்னாள் பிரதமர் மன்மோகன்

By பிடிஐ

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தெளிவான வரையரை இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம மக்களுக்கு எவ்வித பயனும் தராத பட்ஜெட் என்று அவர் விமர்சித்துள்ளார்.

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட் தெளிவில்லாமால் இருப்பதாக, முன்னாள் பிரதமரும், 1991-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மா ராவ் அரசில் நிதியமைச்சருமாக இருந்தவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

"மத்திய பட்ஜெட்டில் சில நல்லெண்ண திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், எனது கவலை அவை எவற்றுக்கும் தெளிவான வரையரை அளிக்கப்படவில்லை.

அதிக நிதி ஒதுக்கீடு இருந்தாலும், அதனை ஆக்கபூர்வமான வழியில் எடுத்துசெல்லக்கூடிய செயல்திட்டங்கள் இடம்பெறாதது குறையாக உள்ளது. ஏழை எளிய மற்றும் கிராமப் பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சமூகநல நிதி திட்டங்கள் போதிய அளவில் இல்லை.

நமது நாட்டின் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த பட்ஜெட்டில் அவர்களுக்கு எந்த அம்சமும் இல்லை" என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்