ஒரு புனித ஆன்மாவான அன்னை தெரசாவை விட்டுவிடுங்கள்: கேஜ்ரிவால் வேண்டுகோள்

By ஐஏஎன்எஸ்

மதமாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதையடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “கொல்கத்தாவில், நிர்மல் இருதய ஆசிரமத்தில் நான் அன்னை தெரசாவுடன் சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு புனித ஆன்மா. தயவுகூர்ந்து அவரை விட்டுவிடுங்கள்.”

என்று கூறியுள்ளார்.

நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். “அன்னை தெரசா போன்றவர்கள் நல்ல சேவை மற்றும் பணி செய்துள்ளனர். ஆனால் நோக்கம் என்னவெனில் ஏழைகளை கிறித்துவ மதத்திற்கு மாற்றுவதுதான்.

சேவை அல்லது பணி என்ற பெயரில் மதமாற்றம் செய்யும் போது அந்த சேவை மற்றும் பணி மதிப்பிழந்து விடுகிறது.” என்று பேசியதையடுத்து நாடெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்