மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆசாத்

By செய்திப்பிரிவு

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக, குலாம் நபி ஆசாத் நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் குலாம் நபி ஆசாத் (65). இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவரின் ஆறு ஆண்டு காலப் பதவி இந்த மாதத்துடன் முடிய இருந்தது. ஆனால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவைக்கு குலாம் நபி ஆசாத் தேர்வு செய்யப்படுவது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசாத் உடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மக்கள் ஜனநாயக் க‌ட்சியைச் (பி.டி.பி) சேர்ந்த மிர் முகமது பயாஸ், நசீர் அகமது லவே மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சம்ஷர் சிங் மன்ஹாஸ் ஆகிய மூவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். இதில் பி.டி.பி.யைச் சேர்ந்த இருவரும் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் டோக்ரி மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்