பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் க.அன்பழகன் மனு

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை எனவே அவரை நீக்கிவிட்டு, அரசு தரப்பில் வாதாட வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்னர் நாளை விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 34-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, >'அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது' என நீதிபதி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்