பத்மநாபசுவாமி கோயில் நிலவரம் அதிர்ச்சி அளிக்கிறது: உச்ச நீதிமன்றம் வேதனை

By எம்.சண்முகம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் நிலவரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங் கள் அதிர்ச்சி அளிக்கிறது,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பத்மநாபசுவாமி கோயில் சொத் துகளை கணக்கிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் சார்பில் நியமிக் கப்பட்ட வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கோயிலில் 35 நாள்கள் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் வாதிட்டதாவது:

கோயிலில் ஏ, பி, சி, டி, இ, எஃப் என ஆறு அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இதில், முதல்படி - 1, முதல்படி - 2 என்ற மேலும் இரு அறைகள் கண்டறியப்பட்டு அதற்கு, ஜி, ஹெச் என்று பெயரிடப் பட்டுள்ளது. இதில் ஒரு அறை முறையாக மூடி சீல் வைக்கப் படவில்லை. எனவே நகை களை முறைகேடாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறைக ளை பூட்டி அதன் சாவியை மாவட்ட நீதிபதி ஒருவரின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்.

உண்டியல்களை 45 நாட்களுக்கு ஒருமுறை திறக்கின் றனர். இதை மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோபால் சுப்ரமணியம் வாதிட்டார்.

நீதிபதிகள் லோதா, பட்னாயக் அடங்கிய அமர்வு, “கோவில் நிலவரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை கவலை அளிக்கிறது. இதில் தேவையான உத்தரவுகளை பிறப் பிப்பது அவசியம்,” என்றனர்.

கேரள அரசு சார்பில் வழக்கறி ஞர் விஸ்வநாதன் ஆஜரானார். “கோயில் குளம் பராமரிப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை உடனே அமல்படுத்தவும் தயார்,” என்றார்.

கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். “அன்னதானத்துக்கு ஐந்து கணக்குகள் மட்டுமே உள்ளன. வைப்பு நிதி கணக்குகளையும் சேர்த்து அவர் தவறாக குறிப்பிடுகிறார். வழக்கறிஞர் உள்நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் மீது கற்பனையாக குற்றம் சாட்டுகிறார்,” என்றார்.

இதை அனுமதிக்க மறுத்த நீதிபதிகள், “கோயில் நிலவரம் குறித்து மட்டும் வாதிட்டால் போதும். வேறு எதுவும் கூற அனுமதிக்க முடியாது,” என்றனர். வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் தொடரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்