பொதுத்துறை மட்டுமில்லாமல் தனியார் துறை, அந்நிய முதலீடுகள் மூலம் இந்திய பாதுகாப்புத் துறை நவீனமயமாக்கப்படும். நாட்டின் பாதுகாப்புத் துறை வலுவானதாக இருந்தால்தான் வளமும், வளர்ச் சியும் பாதுகாப்பாக இருக்கும் என பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படைத் தளத்தில் 10-வது 'ஏரோ இந்தியா 2015' சர்வதேச விமானக் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 64 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சர்வதேச விமானங்களின் சாகசங்களை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், சதானந்த கவுடா, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 250-க்கும் மேற்பட்ட இந்திய விமான தயாரிப்பு நிறுவனங்களும், 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதுவே, இந்தியாவில் மட்டு மல்ல ஆசியாவில் நடைபெறும் மிகப்பெரிய விமான கண்காட்சி என்பதில் பெருமிதம் கொள் கிறேன். கடந்த 75 ஆண்டுகளாக விமானத் துறையில் இந்தியா சாதித்து வருவதை உலகிற்கு உணர்த்த வேண்டிய மிகச்சரியான தருணம் இதுதான்.
நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு தேவையான 60 சதவீத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதில் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டால் இந்தியாவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த முடியும். தற்போது உள்நாட்டில் பாதுகாப்புத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பணியாற்று கின்றனர்.
உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்களின் தயாரிப்பை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரை உயர்த்தினால் அடுத்த 5 ஆண்டுகளில் நமது பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரமும் பயனடையும். எனவே ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.
அந்நிய முதலீடு
உலக நாடுகளின் பாதுகாப்பு மையமாக திகழும் நிலையை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்திய பாதுகாப்புத் துறையின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியில் புதிய யுகம் தொடங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறை வலுவானதாக மாறினால்தான் வளமும், பாதுகாப்பும் முன் னேற்றம் அடையும். நம் நாட் டிற்கு தற்போது இருக்கும் அச்சுறுத் தல்களை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்க புதிய கொள் கைகள் வகுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்கத்தில் இந்தியாவின் பொறுப்பையும், இருப்பையும் நன்கு உணர்ந்தி ருக்கிறோம். எதிர்காலத்தை எதிர் கொள்ள பாதுகாப்பு உபகர ணங்களை நவீன தொழில்நுட்பத் திற்கு ஏற்ப புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப நாட்டின் பாதுகாப்புத் துறை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும்.
எனவே பொதுத்துறை மட்டுமில்லாமல் தனியார் துறை, அந்நிய முதலீடுகள் ஆகியவற்றின் கூட்டமைப்பில் பாதுகாப்புத் துறையை முழுமையாக புதிய வடிவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்புத் துறை வலுவானதாக இருந்தால் தான் நாட்டின் பொருளாதார வளச்சியும் பாதுகாப்பாக இருக்கும்.
பாதுகாப்புத்துறை வரிக் கொள்கையில் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்காத வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படும்.
தற்போது பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின்படி அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் 10 லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது. இதனால் இறக்குமதி முழுவீச்சில் குறைக்கப்பட்டு, ஏற்றுமதி அதிகரிக்கும். நாட்டின் பாதுகாப்புத்துறை வளர்ச்சி பெறுவதோடு, பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago