1998-ம் ஆண்டு மான்களை வேட்டையாடியது தொடர்பாக, இந்தி நடிகர் சல்மான் கான் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை மார்ச் 3-ம் தேதிக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி வழக்கறிஞர் விவாதம் முடிவடைந்தது. இதையடுத்து 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கியதும், நிலுவையில் உள்ள 4 மனுக்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு அரசு வழக்கறிஞர் என்.கே.சன்கலா கொண்டுசென்றார்.
9 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது மற்றும் கூடுதல் உண்மைகள் மற்றும் ஆவணங்களை வழக்கில் சேர்ப்பது தொடர்பான மனுக்கள் இவை.
இது தொடர்பாக வழக்கறிஞர் களின் விவாதங்களை கேட்ட நீதிபதி, இம்மனுக்கள் மீது தனது முடிவு மார்ச் 3-ம் தேதி தெரிவிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
நடிகர் சல்மான் கான் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுவை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு ஒன்றில் சல்மான் கான் பங்கேற்றார். ஓய்வு நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற அவர், 2 அரிய வகை மான்களை வேட்டையாடினார். இதையடுத்து சல்மான் கான் மீது வன விலங்குகளை வேட்டையாடுதல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago