பிழைப்புக்காக இடம்விட்டு இடம்பெயரும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவு உயர்ந்துகொண்டே வருகிறது. பரபம்பரையாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு உணவுக்கும் ஊட்டச்சத்துக்குமான பாதுகாப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதும், உணவும் உணவு நடைமுறைகளும் சில நோய்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் என்பதை ஆய்வுமூலம் கண்டறியப்பட்டுள்ளன.
'இடம்பெயரும் சமூகத்தினிரிடையே பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக்குறைபாடு அதிகரிப்பை புரிந்துகொள்ளுதல்' என்ற தலைப்பில் ஆஜீவிகா கழகமும் ஈடெல்கிவ் ஃபௌண்டஷனும் இணைந்து தெற்கு ராஜஸ்தானில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளன. இதன்மூலம் புலம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் எடையளவு குறைவாக உள்ளது அதிகமாகக் காண முடிந்தது.
உடல்வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சிக்குன்றியவர்களின் வளர்ச்சி 53 சதவீதம். இதில் 28 சதவீதம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 33 சதவீதம் பலம்குன்றிய குழந்தைகள். 9 சதவீதத்திற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் எடைகுறைந்த குழந்தைகளாக உள்ளனர். தெற்கு ராஜஸ்தானின் பரந்த விரிந்த உதயப்பூர் கோட்டம் ஒரு வறட்சி மண்டலமாக உள்ளது. இங்கு பெரிய அளவில் பழங்குடியினர் மக்கள் சிறிய அளவில் நில உடைமையாளர்களாக உள்ளனர். பெருகிவரும் புலம்பெயர் குறைபாடுகள் நிறைந்த குழந்தைகளின் வாழ்வாதாரத்தை தக்கவைக்கமுடியாத நிலையில்தான் இந்த சிறு நிலஉடைமையாளர்கள் இருக்கிறார்கள்.
சிறு நில உடைமையாளர்கள்
ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் நடத்தப்பட்ட ஆய்வின்படி 550 லிருந்து 600 இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர். ஒரு வட்டாரத்தில் உள்ள நான்கு பஞ்சாயத்துக்களில் இரண்டில் அதிக இடம்பெயர்வும் மற்ற இரண்டில் குறைந்த இடம்பெயர்வும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு 13 கிராமத்தில் நடத்திய ஆய்வுகளில் 884 வீடுகளில் மூன்றுக்கும் குறைவான குழந்தைகள் உள்ளன.
3 வயதிற்கும் குறைவாக மொத்தமுள்ள 607 தாய்மார்களின் 695 குழந்தைகள் எடைபோட்டும் அவர்களது உயரமும் அளவெடுக்கப்பட்டது. தாய்மார்களின் சராசரி எடைஉயரம் 18.5க்கும் குறைவாக 18.1 சதவீதத்தோடு 58 சதவீதம் இருந்தனர். பல தலைமுறைகளாகவே ஊட்டச்சத்து குறைபாடு இருந்துவருவதே இதற்குக் காரணம் என இந்த பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டது. தாய் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவராக இருக்கும்போது குழந்தைகளும் 1.8 மடங்கு மேலும் அதிகமாக ஊட்டச்சத்து குறைபாடாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதர உண்மைகள்
மேலும், உணவுப் பொருட்கள் குறைவாகக் கிடைக்க, இந்த சிறு நில உடைமையாளர்களின் குறைவான உற்பத்தியும் அக்கறையின்மையுமே ஊட்டச்சந்தின்மைக்கான காரணம் ஆகும். 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் விரும்பி சாப்பிடும் உணவாக ரொட்டி மட்டுமே உள்ளது. 58 சதவீதம் தாய்ப்பாலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சத்துக்கள் நிறைந்த கஞ்சியையும் குழந்தைகள் அருந்துகின்றனர்.
இடம்விட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் அரசு ஊட்டச்சத்து தரும் அங்கண்வாடி மையங்களில் சேர்வது மிகக் குறைவாகவே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அங்கண்வாடி மையங்கள் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் குறைவாகவே செயல்படுகின்றன.
தாய் வேலைக்குச் செல்லும்போது, தாத்தா, பாட்டிகள் முதன்மை பராமரிப்பாளர்களாக இருப்பது 57 சதவீதம். இந்த இடத்தை தந்தையர்கள் 4 சதவீதமும், மூத்த சகோதரர்கள் 5 சதவீதமாகவும் உள்ளனர்.
மொத்தத்தில், வாழ்க்கை துரத்துவதால் இந்த பழங்குடியினர் அடிக்கடி இடம்விட்டு இடம்பெயர நேர்வதால், பாரம்பரிய ஊட்டச்சத்துணவின்மை என்ற குறையோடு குழந்தைப் பராமரிப்பு குறித்த போதிய அக்கறையின்மையும் கூட குழந்தைகள் வலுவின்றி வளர்வதற்கு ஏதுவாக அமைகின்றன என்பதையே இந்த ஆய்வுமுடிவுகள் தெரிவிகின்றன.
தமிழில்: பால்நிலவன்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago