செய்தி மற்றும் தகவல் பிரிவில், 2014-ம் ஆண்டுக்கான சிறந்த இணையதளத்துக்கான விருதை 'தி இந்து' ஆங்கில நாளிதழின் இணையப் பதிப்பு > (https://www.thehindu.com/) வென்றுள்ளது
நுகர்வோர் நுண்ணறிவு மற்றும் சந்தை பகுப்பாய்வு குறித்த உலகளாவிய தகவல் வழங்குநரான 'மேட்ரிக்ஸ் லேப்' எனும் நிறுவனம், 21 பிரிவுகளுக்கான சிறந்த மற்றும் பிரபல இணையதளத்துக்கான இணைய வாக்கெடுப்பை நடத்தியது.
ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 12 இணையதளங்கள் பங்கேற்றன. 21 பிரிவுகளில் 252 இணையதளங்கள் போட்டியிட்டன.
சிறந்த மற்றும் பிரபல இணையதளத்துக்கான வாக்கெடுப்பின் அடிப்படையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழின் இணைய பதிப்பு, வோட்டி (WOTY) என்றழைக்கப்படும் 'வெப்சைட் ஆஃப் தி இயர்' ( >http://websiteoftheyear.co.in/) என்ற விருதை வென்றுள்ளது.
கடந்த 2014 அக்டோபர் 27-ல் இருந்து டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் 3,44,000 வாக்குகள் 'தி இந்து' இணையதளத்துக்கு ஆதரவாக பதிவாகியுள்ளன.
இணையத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 'தி இந்து'வுக்கு கோப்பை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வின்னர் ஆஃப் தி இயர் (WOTY) என்ற குறியீட்டை அடுத்த ஓராண்டு காலத்துக்கு இணையத்தில் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக இணையதளம் தொடங்கிய முதல் நாளிதழ் 'தி இந்து' (ஆங்கிலம்) என்பது குறிப்பிடத்தக்கது. 1995-ல் தொடங்கப்பட்டு தற்போது 20-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இந்த இணையதளம்.
நேர்த்தியான வடிவமைப்பு, எளிமையான வாசகர் பயன்பாட்டு முறை, கருத்தாழம் மிக்க கட்டுரைகள், தகவல்கள், படத் தொகுப்புகள் என பல உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது இந்த இணையதளத்தின் சிறப்பம்சமாகும்.
மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம் சார்பில் பிரிட்டன், ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரேசில், சீனா ஆகிய நாடுகளிலும் இணையதள சேவை பயன்பாட்டு அடிப்படையில் சிறந்த இணையதளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago