பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க திருப்பதி மருத்துவர்கள் மறுப்பு: போதிய வசதி இல்லை என குற்றச்சாட்டு

By என்.மகேஷ் குமார்

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் சிகிச்சை அளிக்க முடியாது என திருப்பதி ருய்யா அரசு மருத்துவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. தெலங்கனா மாநிலத் தில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 37 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் இந்நோய்க்கு இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருந்துகள், முக கவசங்கள் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லாத காரணத்தி னால், பன்றிக் காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என அவர்கள் தெரி வித்தனர். இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்