மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என குற்றம்சாட்டியுள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு எதிராக, மத்திய அரசை எதிர்த்து இரண்டு நாள் போராட்டத்தை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இன்று தொடங்கினார். டெல்லி ஜன்தர் மந்திரில் நடந்து வரும் இப்போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கரும் கைகோத்துள்ளார்.
போராட்டத்தில் அண்ணா ஹசாரே பேசியதாவது:
விவசாயிகளின் ஒப்புதல் இன்றி எப்படி நீங்கள் நிலத்தைக் எடுத்துக் கொள்ளலாம். இந்தியா விவசாய நாடு. அரசாங்கம் விவசாயிகளைப் பற்றி நிச்சயம் சிந்திக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு செயல்படக் கூடாது. இது இந்திய மக்களுக்கான அரசாங்கம். இங்கிலாந்து அல்லது அமெரிக்க மக்களுக்கான அரசாங்கம் அல்ல. இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் இந்திய மக்கள்தான்.
இது மிகப்பெரும் பிரச்சினை. விவசாயிகளின் குரலுக்கு அரசு செவிசாய்க்கா விட்டால், நாடு முழுவதும் மாவட்டம்தோறும் இப்போராட்டத்தை விரிவுபடுத்தி, ராம் லீலா மைதானத்தில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம்.
இந்த அவசர சட்டம் பற்றி கிராமத்திலுள்ள மக்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை மாவட்டம் தோறும் மக்களுக்கு ஏற்படுத்துவோம்.
சுதந்திரம் பெற்ற பிறகு, விவசாயிகளுக்கு எதிரான மிகப்பெரும் அநீதி தற்போது நடக்கிறது. 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், ஒரு கிராமத்தின் 70 சதவீத மக்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். ஆனால், இப்பிரிவை தற்போது நீக்கியுள்ளனர். பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக இப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு, நல்ல நாள் வரும் என மக்களுக்கு உறுதியளித்தனர். அந்த நல்ல நாள் பெருநிறுவனங்களுக்குத் தானா, சாதாரண மக்களுக்கு இல்லையா?
மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு, மாவட்டம் தோறும் பாதயாத்திரை நடத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்ட மேடையில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு அனுமதித்தால் அது கட்சி நிகழ்ச்சியாகி விடும். அவர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து பங்கேற்கலாம். கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் இல்லாமல் நாங்கள் தவிக்கவில்லை. எங்களுக்கு எந்த தனிப்பட்ட நோக்கமோ, விருப்பு வெறுப்போ கிடையாது. தனிப்பட்ட நோக்கம் இருந்தால் அவர்களை நாங்கள் இழந்துவிட்டதற்காக வருந்துவோம். இது மக்களின் பிரச்சினை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago