இமயமலை கேதார்நாத் ஆலயம் ஏப்ரல் 24-ல் மீண்டும் திறப்பு

By செய்திப்பிரிவு

இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலான கேதார்நாத் ஆலயம் யாத்ரீகர்களும் பார்வையாளர்களும் தரிசிக்கும்விதமாக வரும் ஏப்ரல் 24-ல் திறக்கப்பட உள்ளது.

வழக்கமாக கேதார்நாத் சிவன் ஆலயத்துக்கு 7 லட்சம் வரை யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் அக்டோபர் வரை வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு மிகவும் குறைந்த எண்ணிக்கையாக 40 ஆயிரத்துக்கும் குறைவான அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.

2013-ல் எதிர்பாராதவிதமாக அங்குள்ள மந்தாகினி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. இதில் கேதார் பள்ளத்தாக்கில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதன்காரணமாக கேதார்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

தற்போது பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, கேதார்நாத்தில் உள்ள நேரு மலையேற்றப் பல்கலைக்கழகத்தினரால் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ருத்ரபிரயாகை மாவட்ட மாஜிஸ்திரேட் ராகவ் லாங்கர் கூறியபோது, 1500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான தங்கும் விடுதிகள் கேதார்புரியில் கட்டப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் மத்தியில் இவை நிறைவுபெறும்.

கடந்த ஆண்டு குளிர்காலத்தில் ஆலயத்தின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. பின்னர் இச்சந்நதியின் சிலை ஓம்காரேஷ்வர் ஆலயத்துக்கு எடுத்துச்சென்று அங்கே வைக்கப்பட்டன. இக்கோயில் ருத்தரபிரயாகையில் உக்கிமாத் நகரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் கேதார்நாத் ஆலயத்தின் நுழைவாயில் திறக்கப்படும்வரை அங்கே சென்று தரிசித்துவருவார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்