நாளை விண்ணில் பாய்கிறது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-பி செயற்கைக்கோள்

By செய்திப்பிரிவு

உள்நாட்டுத் தயாரிப்பில் ஏவப்படவுள்ள 7 வழி காட்டு (நேவிகேஷன்) செயற் கைக் கோள்களின் ஒருபகுதியாக ஏவப்படும் 2-வது செயற் கைக்கோளை ஏவுவதற்கான கவுன்டவுன் புதன்கிழமை மாலை தொடங்கியது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-பி செயற்கைக் கோள் நாளை (ஏப்ரல் 4) மாலை 5.14 மணிக்கு ஏவப்படவுள்ளது.

இந்தியா தன் சொந்த முயற்சியில் இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் கட்டமைப்பு (ஐஆர்என்எஸ்எஸ்) என்ற செயல்முறையை உருவாக் கும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.

இச்செயல்திட்டமானது அமெரிக்காவின் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்), ரஷ்யாவின் குளோ னஸ், ஐரோப்பாவின் கலிலியோ, சீனாவின் பெய்டௌ, ஜப்பானின் காஸி ஜெனித் சேட்டிலைட் சிஸ்டம் ஆகியவற்றைப் போன்றதாகும்.

இதற்காக 7 செயற்கைக் கோள்களை இந்தியா அனுப்பு கிறது. இந்தியாவின் முதன்மைச் சேவைப் பகுதியி லிருந்து அதாவது இந்திய எல்லையி லிருந்து 1,500 கி.மீ. தொலைவு வரை இந்த செயற்கைக்கோள்கள் கண்காணிக்கும். 20 மீட்டர் தொலைவு துல்லியத்துக்குள் குறிப்பிட்ட இடத்தை அடையா ளம் காண முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

எல்லை மற்றும் கடல் பகுதி கண்காணிப்பு, வழிகாட்டுதல், பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து கண்காணித்தல் உள்ளிட்டவை இச்செயற்கைக் கோள் பணிகளுள் ஒரு பகுதியாகும். இத்திட்டத்துக்காக ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலை முதல் தேதி ஐஆர்என்எ ஸ்எஸ் 1-ஏ செயற்கைக்கோள் ஏவப்பட்டு விட்டது.

1-பி எனப்படும் 2-வது செயற்கைக் கோளை ஏவுவதற் கான கவுன்டவுன் புதன்கிழமை மாலை தொடங்கியது. 58.30 மணி நேர கவுன்டவுன் ஹரி கோட்டாவிலுள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் தொடங்கியது.

இதுதொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், “புதன் கிழமை மாலை 6.44 மணிக்கு கவுன்டவுன் தொடங்கி யுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு செயற்கைக் கோள் ஏவப்படும். இத்திட்டத்தில் மேலும் இரு செயற்கைக் கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும்.

நான்கு செயற்கைக்கோள்கள் உரிய இடத்தில் நிலை நிறுத்தப்பட்டவுடன் இத்திட்டம் செயல்படத் தொடங்கி விடும். எஞ்சிய 3 செயற்கைக்கோள்கள் இத்திட்டத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதற்காக ஏவப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்