காஷ்மீரில் 11 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல்: ராணுவ சோதனையில் பிடிபட்டது

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ எடை கொண்ட 3 ஐஇடி வகை வெடிகுண்டுகள் மற்றும் சில ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றி உள்ளனர்.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாவது:

குப்வாரா மாவட்டம் டிரெகாம் பகுதியில் உள்ள கஸ்ரியல் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையிடமிருந்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவம் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டை நடத்தியது.

அப்போது ஒரு மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருந்த 3 ஐஇடி வகை வெடிகுண்டுகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ள னர். அதில் 2 வெடிகுண்டுகள் தலா 5 கிலோ எடையும் ஒரு வெடிகுண்டு 1 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

இத்துடன் 3 வெடி குண்டுகள், 3 கையெறி குண்டு கள், ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு சீன பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்க ளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் மிகப் பெரிய அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்