குடிநீர் திட்டத்துக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் ரூ. 25 கோடி கடன் வழங்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.
சந்திரபாபு நாயுடு நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருப்பதியில் சிலர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு பரிசீலிக்கும்.
திருப்பதி குடிநீர் திட்டத்துக்காக அரசுக்கு, ரூ. 25 கோடி கடன் வழங்கும்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பின்னர் அவர் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா சென்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago