இணையதளங்களில் விற்பனை என்பது குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் என்ற நிலை மாறி அதில் கால்நடைகளும் இடம் பிடித்து விட்டன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த விவ சாயிகளும் வியாபாரிகளும் புகைப் படங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வாசகங்களுடன் தங்கள் செல்லப் பிராணிகளை பரபரப்பாக விற்பனை செய்து வருகின் றனர்.
‘நாள் ஒன்றுக்கு ஒன்பது லிட்டர் பால் தரும் எருமை விற்பனைக்கு’ என்கிறது குஜராத்தின் போர்பந்தர் விவசாயி கொடுத்துள்ள விளம் பரம். ஹரியாணா, உ.பி., ம.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகமாக காணப்படும் முர்ரா வகை எருமைகள் ரூ.30,000 முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் 9 மாத கர்ப்பிணி எருமை விற்பனைக்கு என்ற விளம்பரமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு, ‘மார்ச்சில் பிரசவம் ஆகும்’ என பின்குறிப்புடன் எருமைக்கு எத்தனையாவது பிரசவம் என்பன உள்ளிட்ட விவரங் களும் இடம்பெற்றுள்ளன. குட்டி எருமைகளும் விற்பனையில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
‘நல்ல நிலையில் ஓடும் வாகனம்’ என்பதுபோல், ‘நல்ல நிலையில் உள்ள எருது’ என்கிறது பஞ்சாபின் சங்ரூர் விளம்பரம். வெளிநாடுகளில் அதிகம் வாழும் பஞ்சாபிகள், அங்கிருந்து இறக்கு மதி செய்த எருதுகளை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் பதி வேற்றம் செய்துள்ளனர்.
இணையதளத்தில் டெல்லி எருமைகளும் இடம் பெற் றுள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களிலிருந்து பசுக்களையும் காளைகளையும் பார்க்க முடியவில்லை. கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் ஜெர்ஸி பசுக்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இணையதள விற்பனையில் தென் மாநிலங்களைவிட, வட மாநிலங்களில்தான் கால்நடை விளம்பரங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
கால்நடைகள் பராமரிப்புக்கான பொருட்களும் இணையதள விற்பனையில் இடம் பெறத் தவறவில்லை. ‘எருமைகளின் காவலுக்கு பொருத்தமான 7 மாத வயதில் ராட்வெய்லர்’ எனப் படத்துடன் மபியின் ரிவாரியிலிருந்து ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், எருமைகளின் கொட்டகைக் காக வகை, வகையான கூரைகள் மற்றும் உணவுக்கான தீவனங்களும் டெல்லியின் சிறுதொழில் விளம்பரங்களும் தவறாமல் இடம் பெற்றுள்ளன.
இவை அனைத்துக்கும் தொடர்புகொள்ள செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் நேரடி விற்பனையாளர் மிகவும் குறைவு. ஏனெனில், விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி இல்லை என்பதும், தாங்கள் வசிக்கும் கிராமங்களில் இணையதளத்துக்கான வைபை வசதி இல்லை என்பதும் முக்கியக் காரணமாகும். எனவே, கிராமங் களில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு சுயதொழிலாக எடுத்து செய்யத் தொடங்கி உள்ளனர்.
உபியின் பரேலிக்கு அருகிலுள்ள கமால்பூரைச் சேர்ந்த இளைஞர் ராம் பிரசாத் யாதவ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “விவசாயிகளுக்கு தங்கள் கால்நடைகளை விற்க வேண்டும். எங்களுக்கு வேலை வேண்டும். இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் விற்பனைக்கான இணையதளங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். இதற்காக செல் போன்களை பயன்படுத்திக் கொள் கிறோம். வழக்கமாக அதிக செலவு வைக்கும் செல்போன்கள் என் போன்றவர்களுக்கு அதிக வரவைத் தருகிறது” என்றார்.
இதுபோன்ற இணைய தளங்களில் நேரடி விற்பனை யாளர்கள் இல்லை என்பதால், கால்நடைகளின் விலை சற்று அதிகமாகவே உள்ளதாகக் கருதப்படுகிறது. இவற்றை வாங்கும் விவசாயிகளும் மற்றவர்களின் உதவியை நாட வேண்டி இருப்பதால், வழக்கமான கிராம சந்தைகளைபோல, இணையதளங்களில் எருமைகள் விற்பனை சூடு பிடிப்பதைக் காண முடியவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago