பிஹார் சட்டப்பேரவையில் நாளை வாக்கெடுப்பு: மாஞ்சி தலைமையிலான அரசு கவிழ்கிறது?- எம்எல்ஏக்களுக்கு கட்சியினர் விருந்து

By பிடிஐ

பிஹார் சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான அரசு கவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் முதல்வர் பதவியி லிருந்து விலகுமாறு மாஞ்சியை ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக் கொண்டது. இதை ஏற்க மறுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து தனக்கு 130 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, தனது தலைமையில் ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோரினார். இதை ஏற்க மறுத்த ஆளுநர், 20-ம் தேதி பெரும்பான்மையை நிருபிக்குமாறு மாஞ்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

87 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக தனக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில் மாஞ்சி டெல்லியில் முகாமிட்டிருந்தார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறு கட்சி எம்எல்ஏக்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களிப்பதை தடுக்கும் விதத்தில் விருந்து அளித்து வருகின்றன. பாஜக நடுநிலை வகிக்க முடிவு செய்திருப்பதால், மாஞ்சி அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்