மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

By ஆர்த்தி தார்

மத மாற்றத்தை சேவையின் பெயரில் மேற்கொள்ளும்போது, அந்த சேவைக்கான அடிப்படை ஆதாரமே மதிப்பற்றதாகிவிடுகிறது.

அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பஜேரா எனும் பகுதிக்குட்பட்ட பரத்பூர் கிராமத்தில் அப்னா கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் மஹிளா சதன், சிசு பால் கிரஹா ஆகியனவற்றின் திறப்புவிழாவில் பேசியபோதே மோகன் பகவத் இவ்வாறு கூறியுள்ளார்.

மோகன் பகவத் பேசியதாவது:

"அன்னை தெரசாவின் சேவைகள் எல்லாம் மிகவும் நல்லதாகவே கருதப்பட்டிருக்கும், அவரது சேவைக்குப் பின்னணி குறிக்கோள் மட்டும் மத மாற்றமாக இல்லாமல் இருந்திருந்தால்.

மத மாற்றத்தைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை. ஆனால், சேவையின் பெயரில் மத மாற்றத்தை மேற்கொள்ளும்போது, அந்த சேவைக்கான அடிப்படை ஆதாரமே மதிப்பற்றதாகிவிடுகிறது.

அன்னை தெரசாவின் குறிக்கோள் மத மாற்றமே, ஆனால், இங்கு தனது சேவையைத் தொடங்கியுள்ள அப்னா கர் அமைப்பின் கொள்கை ஏழைகளுக்கு சேவை செய்வது மட்டுமே" இவ்வாறு பகவத் பேசியுள்ளார்.

மோகன் பகவத் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்

அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "கொல்கத்தாவில் உள்ள நிர்மல் ஹிரதய் ஆசிரமத்தில் ஒரு சில மாதங்கள் நான் அன்னை தெரசாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவர் உன்னதமானவர். அவரை தயைகூர்ந்து விட்டுவிடுங்கள்"

டெரக் ஓ பிரெயின்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரக் ஓ பிரெயினும் ட்விட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். "அன்னை தெரசா குறித்த கருத்துகளை மோடி இப்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் சொல்வாரா" என வினவியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்