ஹைதராபாத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். போலீஸாரின் சோதனைக்கு பிறகு இது வதந்தி என தெரிய வந்தது.
ஹைதராபாத் தில்ஷுக் நகரில் புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சில மர்ம நபர்கள், காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொலைபேசியில் தொடர்புகொண்டு, சாய்பாபா கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சில நிமிடங்களில் அது வெடிக்கும் என்றும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, போலீஸாரும் வெடி குண்டு நிபுணர்களும் விரைந்து சென்று கோயிலில் இருந்து பக்தர்களை வெளியேற்றி சோதனை செய்தனர். ஆனால் இது வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இந்தக் கோயிலுக்கு அருகே 2 முறை வெடிகுண்டு வெடித்துள்ளது. ஒரு முறை வெடிகுண்டு இருந்ததைக் கண்டு பிடித்து செயலிழக்க வைத்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago