பெட்ரோலிய அமைச்சக ஆவணங்களை திருடியது எப்படி?

By செய்திப்பிரிவு

பெட்ரோலிய அமைச்சக அலுவல கத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தில் ஜெராக்ஸ் இயந்திரம் அருகில் முக்கிய ஆவணம் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அந்த ஆவணம் அங்கு எப்படி வந்தது என்பது சந்தேகத்தை எழுப்பியது.

சில மாதங்களுக்குப் பிறகு மூத்த இயக்குநர் ஒருவரின் அறைக் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் நுழைந்துள்ளனர். அவர்கள் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பலத்த பாதுகாப்பை எளிதாக கடந்து சென்றுள்ளனர். மேலும் போலி சாவிகளை பயன்படுத்தி பெட்ரோலிய அமைச்சக அலுவலக கதவுகள், பீரோக்களை திறந்து ஆவணங்களை திருடியுள்ளனர். இதற்கு அலுவலக ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜெய்பால் ரெட்டி பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தபோது அந்த அலுவலகத்தில் ஆசாராம் என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தின் சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு ஆவணங்களை திருடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் நிரபராதி, எனது மகன்தான் திருட்டில் ஈடுபட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேட்டால் பெட்ரோ லிய அமைச்சக அலுவலகம் மட்டுமன்றி சாஸ்திரி பவனில் உள்ள அனைத்து அலுவலகங்களின் பாதுகாப்பு நடைமுறைகளும் தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்