மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்வு களில் நிகழ்ந்துள்ள ஊழலில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்குத் தொடர்பு இருப்ப தாகக் கூறி, அவர் பதவி விலக வேண்டுமென நேற்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அம்மாநிலத்தில் அரசுத் துறை களில் மருத்துவர்கள், பொறியாளர் கள் மற்றும் தணிக்கையாளர்கள் போன்ற பணியிடங்களுக்குத் தேர்வு கள் மூலம் ஆட்கள் நியமிக்கப் படுகிறார்கள். அந்தத் தேர்வு எழுதாமல் பணியைப் பெற பல பேர் சிலருக்கு லஞ்சம் கொடுத் திருந்தனர்.
ஆனால் மேற்கண்ட பணிகளுக் குத் தேர்வானவர்கள் பட்டிய லில் லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்கள் இல்லை. இதனால் கொதிப்படைந்து லஞ்சம் கொடுத் தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுக்கு ஆதர வாக காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைத்தனர். நேற்று அம்மாநில சட்ட மன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் உரையாற்றத் தொடங்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பியதால் அவர் தனது உரையை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று.
காரணம், இந்த ஊழலில் ஆளு நரின் மகனான சைலேஷ்யாதவின் பெயரும் சிக்கியுள்ளது. முன்ன தாக, இந்த ஊழல் தொடர்பாக ஆளுநருக்கான சிறப்புப்பணி அதிகாரி தன்ராஜ் யாதா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில், முதல்வரைக் காப் பாற்றுவதற்காக, சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்று கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒரு மனு கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தன் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தும் திக்விஜய் சிங் மீது தான் வழக்கு தொடர உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago