வளர்ச்சி 8%-ஐ தாண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை

By செய்திப்பிரிவு

வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கும் என்றும், இது அனைவரின் கண்ணீரையும் துடைக்க வழிவகுக்கும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

2015-16 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வரும் ஆண்டில் அடையவுள்ள பொருளாதார வளர்ச்சி, இந்திய இளைஞர்களின் கனவை நனவாக்க துணைபுரியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர் திருத்தத்துக்கு அரசியல் அங்கீகாரம் உள்ளது; உகந்த வெளிப்புற சூழ்நிலை நிலவுகிறது; பெருமளவு சீர்திருத்தத்துக்கு வாய்ப்புகள் உள்ளன என்று கூறும் பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

தேசிய கணக்கீட்டுக்கான அடிப்படை ஆண்டில் மத்திய புள்ளியல் அலுவலகம் மாற்றி அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிள்ள ஆய்வு, 2015-16ம் ஆண்டில் வளர்ச்சி சந்தை விலை அடிப்படையில் 8.1%-ல் இருந்து 8.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2011-12ம் ஆண்டு சந்தை விலைகளின் அடிப்படையில் நிலையாகக் கொண்டால் 2012-13ம் ஆண்டில் 5.1% ஆகவும், 2013-14ம் ஆண்டில் 6.9% ஆகவும் இருக்கும். 2014-15ம் ஆண்டில் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி வளர்ச்சி விகிதம் 7.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலைக்கான கட்டுப்பாட்டை நீக்கி இருப்பது எரிசக்தி பொருட்களுக்கு வரி, சமையல் எரிவாயுக்கான மானிய முறை மாற்றி நேரடியாக பட்டுவாடா, நிலக்கரி துறையில் சீர்திருத்தத்தை செயல்படுத்துவதற்கு அவசர சட்டம், பாதுகாப்பு போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உயர் அளவை அதிகரித்தல் போன்ற சீர்திருத்தங்களை இந்த ஆய்வு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

14வது நிதி ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது குறித்து பரிந்துரைத்துள்ள முற்போக்கான புதிய யோசனைகளை இந்த ஆய்வு வரவேற்றுள்ளது.

முதலீடுகளுக்கு நல்ல வாய்ப்பு

2013ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து பணவீக்க விகிதம் 6% அளவில் குறைந்து இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள இந்த ஆய்வு அறிக்கை, நடப்பு கணக்கு பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

2012-13ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7% என்ற உயர் அளவில் இருந்த பற்றாக்குறை, வரும் நிதி ஆண்டில் ஒரு சதவீதமாக இருக்கும். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான இது நல்ல வாய்ப்பாக அமைகிறது என்று ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

உகந்த பொருளாதார சூழ்நிலை வரும் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் உயர் வளர்ச்சி விகிதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டுவதற்கான பெறும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலை எளிய மற்றும் நலிந்த மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதற்கு வழிவகுத்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.

இளைஞர்கள், மத்தியதர வர்க்கத்தினர் தங்களுடைய எதிர்பார்ப்புகளை எட்டும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு தனது முதலாவது முழு பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில் நாடு நல்லதொரு நிலையை எட்டியிருப்பதை சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு அறிக்கை சீர்திருத்தங்களை பெரிய அளவில் செயல்படுத்துவதற்காக பெரும் வாய்பு ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறது.

வேளாண் துறை வளர்ச்சி குறைவு

சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பருவ மழை இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் சாதகமான சூழ்நிலையில் வளர்ச்சி வீதம் 8% இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் வேளாண் துறையில் அடிப்படை விலைகளில் கணக்கில் கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டின்படி வளர்ச்சி வீதம் 2013-14ம் ஆண்டில் 3.7%-ல் இருந்து குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமான பருவ மழை இல்லாத 2014-15ம் ஆண்டு இந்த வளர்ச்சி 1.1% ஆக இருக்கும்.

ஏற்றுமதியில் வளர்ச்சி

2014-15ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் பெரும் அளவில் உள்நாட்டு தேவையில் ஏற்பட்ட அதிகரிப்பை சார்ந்திருந்தது. இந்த ஆண்டில் வெளிநாட்டு ஆதரவு அதிக அளவில் இல்லை. ஏற்றுமதி வளர்ச்சி 0.9% ஆகவும் இறக்குமதி வளர்ச்சி –0.5% ஆகவும் இருந்ததை இந்த ஆய்வு அறிக்கை காட்டுகிறது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள குறைவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும்.

மொத்த உள்நாட்டு சேமிப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியையும் இந்த ஆய்வு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2011-12ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.9%மாக இருந்த சேமிப்பு அளவு 2012-13ம் ஆண்டு 31.8% ஆகவும் 2013-14ம் ஆண்டு 30.6% ஆகவும் குறைந்தது. வீட்டு சேமிப்பில் ஏற்பட்டுளள வீழ்ச்சியே இதற்கு காரணமாகும்.

முதலீடு விகிதம் சரிவு

கடந்த ஆண்டுகளில் முதலீட்டு வீதமும் குறைந்திருப்பதையும் இந்த ஆய்வு அறிக்கை எடுத்துக் கூறுகிறது. மொத்த மூலதன அமைப்பு கணக்கீட்டின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2011-12ம் ஆண்டு 38.2% ஆக இருந்த இந்த முதலீடு, 2012-13ம் ஆண்டு 36.6% ஆகவும், 2013-14ம் ஆண்டு 32.3% ஆகவும் குறைந்தன.

முதலீடு பற்றி குறிப்பிடும் இந்த ஆய்வு, நீண்டகால வளர்ச்சிக்கு தனியார் முதலீடு முக்கிய உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், வளர்ச்சிக்கும், தொலைதூர தொடர்பிற்கும் பொதுத்துறை முதலீடு குறிப்பாக ரயில்வே துறையில் முதலீடு முக்கிய பங்காற்றமுடியும். குறைந்தது இடைக்கால நடவடிக்கையாக இது இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% அளவுக்கு குறைப்பதை நோக்கமாக கொண்டு அரசு செயல்பட வேண்டும் இந்த ஆய்வு அறிக்கை அரசை வலியுறுத்தி உள்ளது.

மானியங்களில் கவனம்

நாட்டில் ரூ.3,78 லட்சம் கோடி மதிப்பிலான மானியத்தால் ஏழை எளிய மக்கள் பயனடைவது குறைவு என்றும், வறுமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இது உகந்தது அல்ல என்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. | விரிவான செய்திக்கு - >'ரூ.3,78,000 கோடி மானியத்தால் ஏழைகள் பலனடைவது குறைவு' |

திட்டங்கள் தேக்கம்

பல திட்டங்கள் தேக்கம் அடைந்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்த ஆய்வு அறிக்கை, இந்தப் போக்கு அண்மைல்காலத்தில் அதிகரித்து இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. எனினும், இந்த தேக்க நிலை இப்போது நிலைத்தன்மை அடைந்திருப்பதை குறித்து இந்த அறிக்கை ஆறுதல் தெரிவித்துள்ளது. பொதுத்துறை, தனியார் பங்களிப்புடனான முதலீட்டிற்கு உத்வேகம் அளிக்கும் யோசனையை இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டும் இந்த ஆய்வு அறிக்கை, இந்தியப் பொருளாதார சூழலுக்கு இவை இரண்டுமே முக்கியமானவை என்று கூறுகிறது.

இந்தியாவில் திறமையை வளர்க்கும் முயற்சி போன்று "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்ற இயக்கத்துக்கும்" கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

வேளாண்மை

வேளாண்மை பொருட்களுக்கான பொதுவான தேசிய சந்தைப்பற்றி குறிப்பிடுகையில் சில குறிப்பிட்ட வேளாண் பொருட்களின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த தேசிய சந்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் சாசன விதி முறைகளை பயன்படுத்தலாம் என்று ஒன்றை ஏற்படுத்த யோசனை தெரிவித்துள்ளது.

14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப் பற்றிக் குறிப்பிடுகையில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துகளை எடுத்துக்காட்டியுள்ளது. 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதும் நிதி ஆயோக்கை உருவாக்குவதும் கூட்டுறவு முறையிலான ஒன்றிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரிதும் உதவும் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

முதலீட்டுக்கு மும்முனை உத்திகள்:

1. குறிகிய கால கட்டத்திற்கு பொது முதலீட்டை புதுப்பிக்குமாரறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தனியார் முதலீட்டுக்கு ஒரு மாற்றாக பொது முதலீடு இருக்க முடியாது; ஆனால், அதை நிரப்புவதற்கு காரணியாகவும் மற்ற முதலீடுகளை ஈர்க்கவும் தேவைபடுகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

2. கடன் தீர்க்க முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களை வலுப்படுத்தும் புதுமையான தீர்வுகள் தேவை என்று இந்த ஆய்வு கூறுகிறது. கடனிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு உள்ளன என்பதை இது உறுதி செய்யும். புதிய முதலீடுகளை பெறுவதற்கான திறனைக் குறைக்கும் அதிகபடியான கடன்சுமையை குறைக்கவும் உதவும்.

3. பொது - தனியார் பங்கு முறையில் புதிய நோக்கும் மறுசீரமைப்பும் தேவை என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது எதிர்காலத்தில் இந்த முறை நிலையாக செயல்படுத்தப்படக்கூடியது என்ற சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது முடங்கியுள்ள திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.8 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகும். தனியார் மற்றும் பொதுத் துறைகளில் முடங்கியுள்ள திட்டங்ளுக்கான காரணங்கள் வேறு என்று பொருளாதார அறிக்கை கூறுகிறது. தனியார் துறைகளில் கடன் தொடர்பான காரணிகள் அதிகமாக உள்ளன. அதேசமயம், பொது துறையில் ஒழுங்குமுறை அனுமதி தாமதங்களே முக்கிய காரணமாக உள்ளது. பொது துறை வங்கிகள் மற்றும் பெரியளவிலான நிறுவங்களின் வரவு செலவு திட்ட அறிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தனியார் முதலீடுகளை கட்டுப்படுத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்