சிறிசேனாவுக்கு மோடி வாழ்த்து: இந்தியா வரும்படி அழைப்பு

By ஆர்.ஷபிமுன்னா

இலங்கையின் புதிய அதிபரான சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவுக்கு வரவேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மைத்ரிபால சிறிசேனாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ஜனநாயக முறையில் அமைதியாக நடத்தப்பட்ட தேர்தலுக்காக அந்நாட்டு மக்களை வாழ்த்துகிறேன். ஒரு நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாக இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஆதரவை இலங்கையின் அமைதி, வளர்ச்சி மற்றும் செழுமைக்காக மீண்டும் உறுதிப்படுத்தினேன்’ என மோடி தெரிவித்துள்ளார்.

சிறிசேனாவுக்கு மோடி எழுதியுள்ள கடிதத்தில், ‘உங்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியானது, இலங்கை மீதான உங்கள் நோக்கத்துக்கான காணிக்கை ஆகும். இதன் மூலம், வளர்ச்சிக்காக ஏங்கும் மக்களுடன் ஓர் அதிபராக அதை இணைக்கலாம். மக்கள் மற்றும் சமூகம் பலனடையும் வகையில் நம் உறவை புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கையில் அமைதி மற்றும் வளர்ச்சியை நம்பகமான முறையில் மாற்றியமைக்கும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். சிறிசேனாவின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அந்தக் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடனும் மோடிக்கு நெருக்கமான உறவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்