உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் மகர மேளாவில் காணாமல் போன 20,740 பேர் இரண்டு நாட்களில் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது `காணாமல் போன பக்தர்களின் முகாம்’ எனும் பொதுநல அமைப்பின் சாதனையாகக் கருதப்படுகிறது.
திரைப்படங்களில் வருவதைப் போல, பலர் கோயில் திருவிழாக்களில் காணாமல் போவது வழக்கம். இதுபோல அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகர மேளாவிலும் பலர் காணாமல் போகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக, `காணாமல் போன பக்தர்கள் முகாம்’ எனும் பெயரில் முகாம் அமைத்து பல பொதுநல அமைப்புகள் செயல்படுகின்றன.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், விழாவில் தம் குடும்பத்தார், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து தவிப்பவர்களை மீட்டு தங்கள் முகாமுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். பின்னர் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்து அவர்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இணைத்து வைக்கின்றனர்.
கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் மறைந்தபடி ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. இதன் கரைகளில் ஒரு பெரிய கூடாரத்தின் கீழ் இயங்கும் அந்த முகாம்களில் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, `தி இந்து’விடம் அலகாபாத் ரயில்வே மண்டல ஐஜி எல்.வி.ஆண்டனி தேவகுமார் கூறும்போது, “கடந்த பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மேளாவில் பல்வேறு பொதுநல அமைப்புகள் பல இடங்களில் இருந்து வந்து, மாநில அரசின் அனுமதியுடன் பணியாற்றுகின்றனர். ரயில் நிலையங்களிலும் அவர்கள் முகாம் அமைத்து போலீஸாருக்கு மிகவும் உதவியாக இருப்பது பாராட்டத்தக்கது” என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் மகர சங்கராந்தி முதல் பிப்ரவரியில் வரும் மஹா சிவராத்திரி வரை மகர மேளா நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 14 முதல் நடைபெற்று வரும் இந்த விழாவில் இதுவரை காணாமல் போன சுமார் 33,000 பேர் தங்கள் வீடு சேர இந்த அமைப்பினர் உதவியுள்ளனர்.
இதில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சுமார் 1,300 பேர். வயதானவர்கள் மற்றும் பெண்களும் இதில் அடங்குவர். குறிப்பாக கடந்த மவுனி அமாவாசையின்போது காணாமல் போன 20,740 பேரை இரண்டு நாட்களில் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைத்து பொதுநல அமைப்புகள் சாதனை புரிந்துள்ளன.
மகர சங்கராந்தி அன்று திரிவேணி சங்கமம் மற்றும் அதன் அருகிலுள்ள கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டு புனித நீராடியவர்கள் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். ஜனவரி 20-ல் முடிந்த மவுனி அமாவாசை அன்று 90 லட்சம். தமிழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொள்வதுண்டு.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago