தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந் துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக உள்ளது. ஹைதராபாத், மகபூப் நகர், மேதக், கரீம்நகர், நல்கொண்டா ஆகிய மாவட்டங் களில் இந்நோயால் அதிக மானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சிறப்பு மருத்துவக் குழுவினர் இந்த மாவட்டங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மாநி லத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இந்த நோய்க்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மருந்துகள், முக கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது தொடர்பாக இதுவரை 1,026 பேர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் 416 பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 மருத்துவர்கள், 2 செவிலியர் களையும் இந்த நோய் தாக்கி யுள்ளது. இந்நிலையில் மகபூப் நகர் மாவட்ட இணை ஆட்சியர் ராஜாராமும் பன்றிக் காய்ச் சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத் நிம்ஸ் அரசு மருத்துவமனை இயக்குநர் நரேந்திரநாத் நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, பன்றிக் காய்ச்சலுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருந்து கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
திங்கள்கிழமை மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 46 பேர் இந்நோய் தாக்கு தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பன்றிக் காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago