நாட்டின் 66-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங் களிலும் ஆளுநர் ஈ.எஸ்.எல் நரசிம்மன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த பிறகு நடை பெற்ற முதல் குடியரசு தின விழா இரு மாநிலங்களிலும் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விரு மாநி லங்களுக்கும் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஈ.எஸ்.எல் நரசிம்மன், முதலில் தெலங்கானா மாநில குடியரசு தின விழா நடைபெற்ற செகெந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடி யேற்றி வைத்து, அங்கு போலீ ஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு உரையாற்றினார்.
அப்போது இவர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 10 மாவட் டங்களில் 9 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்கள் என கூறி, தெலங்கானாவின் பொற்காலத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இவ்விழாவில் முதல்வர் கே.சந்திர சேகர ராவ் உட்பட மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
இதனை தொடர்ந்து ஆளுநர் நரசிம்மன் விமானம் மூலம் விஜயவாடா சென்றார். அங்கு ஆந்திர மாநிலத்தின் சார்பில் இந்திராகாந்தி மாநகராட்சி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணியில் ஜப்பான் நிபுணர்கள் பங்கேற்றுள்ளதாகவும், இதனால் உலகத்தரம் வாய்ந்த தலைநகரம் உருவாகும் என்றும் நரசிம்மன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சந்திர பாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள், பொது மக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago