திருப்பதி அருகே போலீஸ் தடையை மீறி நேற்று ஜல்லிக் கட்டு நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள், சீறிவந்த காளைகளை பிடித்து விளையாடினர்.
திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலம் ரங்கம் பேட்டையில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக் கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் இந்த கிராமத்தில் அறிவிப்பு செய்து அங்காங்கே நோட்டீஸ்களை ஒட்டினர். மேலும் கிராமங்களில் தண்டோரா போட்டும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தியே தீரவேண்டும் என சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி உட்பட கட்சி பேதமின்றி அனைவரும் குரல் கொடுத்தனர்.
அதன்படி ரங்கம்பேட்டையில் நேற்று அக்கம்பக்கத்து கிராமங் களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக விடப்பட்டன. காளையின் தலை யில் பரிசுகள் கட்டப்பட்டிருந்தன. இளைஞர்கள் பலர் பயமின்றி காளைகளை மறித்து பிடித்து பரிசுகளை சொந்தமாக்கிக் கொண்டனர்.
இந்த வீர விளையாட்டை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago