ஹைதராபாத்தில் சட்ட விரோதமாக வெடிமருந்து பொருட் களை வைத்திருந்த 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 900 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1,500 டெட்டனேட்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
குடியரசு தின விழா நெருங்கு வதையொட்டி, ஹைதராபாத் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பஞ்சார ஹில்ஸ் போலீஸார் கட்டிட காண்டி ராக்டரான மதுசூதன் ரெட்டி (37) மற்றும் கல் குவாரி காண்டி ராக்டரான ஜங்கய்யா (47) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 900 ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் மற்றும் 1,500 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த விற்பனையாளர் ராமகிருஷ் ணாவிடமிருந்து வெடி மருந்து பொருட்களை வாங்கி, அதை கல் குவாரி வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago