இன்று ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளதால் கூட்டம் அலை மோதுகிறது.
ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டுக்கு ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இம்முறை வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வந்ததால் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர்.நேற்று அதிகாலை முதலே திருமலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர்.
தேவஸ்தான நிர்வாகம் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை முதலே அனைத்து ஆர்ஜித சேவைகளை யும், சிறப்பு தரிசனங்களையும் ரத்து செய்தது. இருப்பினும் சர்வ தரிசனத்துக்கு 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசித்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த தால் நேற்று காலையில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது. இதனால் பல மணி நேரம்காத் திருந்த பக்தர்கள், டி.பி.சி. விடுதி பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, போலீஸார் தலையிட்டு பக்தர் களை சமாதானம் செய்தனர். ஆயினும் பக்தர்கள் சமாதானம் அடையவில்லை. பின்னர் தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு ஆகியோர் நேரில் வந்து, விரைவில் தரிசனத் துக்கு அனுமதிக்கப்படுவர் என உறுதி அளித்ததால் பக்தர்கள் சமாதானம் அடைந்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு இன்று அதிகாலை 1.30 மணியிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். முதலில் மடாதிபதி கள், உச்ச நீதிமன்ற, மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளின் குடும்பத்தினர், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோயில் முகப்பு கோபுரம் வழியாகஅனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வைகுண்டம் காம்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சர்வதரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago