சுனந்தாவின் லேப்டாப், செல்போன்: தடயவியல் துறையினர் ஆய்வு

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் இறப்பு விவகாரத்தில், சுனந்தா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் நான்கு செல்போன்கள் தடயவியல் துறையினர் சோதனைக்காக குஜராத்தில் உள்ள தடய அறிவியல் இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சுனந்தா இறப்பு விவகாரத்தில், திங்கள்கிழமை சசி தரூரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் சுனந்தாவின் லேப்டாப் மற்றும் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளது. அதன் மூலம் ஏதேனும் முக்கிய மான தகவல் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பதாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து தடய அறிவியல் இயக்குநரகத்தின் இயக்குநர் ஜே.எம்.வியாஸ் கூறும்போது, "இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்தக் காலக்கெடுவும் விதிக்கப் படவில்லை. எங்களிடம் உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு சுனந்தா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன்களை ஆராய உள்ளோம்.

அதன் மூலம் அவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண் டிருந்தார், என்ன மாதிரியான தகவல்களை அவர் பரிமாறிக் கொண்டார் என்பது குறித்து தெரிய வரும். அவை போலீஸாருக்குப் பயன்படலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்