டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி போட்டியிடும் நிலையில், அவரது புகைப்படம் ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரப் போஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தன் அனுமதியின்றி தன்னுடைய படத்தை ஆம் ஆத்மி கட்சி தங்களது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கிரண் பேடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த பிரவீன் சங்கர் கபூர் கூறுகையில், "எங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமது படங்கள் பயன்படுத்தப்பட்ட போஸ்டர்களை நீக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி, ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்ட நிலையிலிருந்தே அந்தக் கட்சியில் இருந்தார்.
சமீபத்தில் அவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago